மத்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும் நேபாள நாட்டின் வெளியுறவு செயலாளர்..!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாள நாட்டின் வெளியுறவு செயலாளர் பரத்ராஜ் பாடியால், வந்துள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அழைப்பு விடுத்ததன் பேரில் பரத் இந்தியா வந்துள்ளார். 

இதன்படி இந்தியாவுக்கு வருகை தந்த அவர் நேற்று, இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ராவை சந்தித்து பேசினார். இதில் இருதரப்பு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய வெளிவிவகார துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று மத்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்ரை, பரத் சந்தித்து பேச உள்ளார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepal foreign Secretary today Meet union Minister External Affairs


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->