மாசுபட்ட நகரங்களின் பட்டியலில்... முதலிடம் பிடித்த நேபால் தலைநகர் காட்மாண்டு.! - Seithipunal
Seithipunal


நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டு உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருக்கிறது.

ஐ.க்யூ ஏர் என்ற அமைப்பின் கூற்றுப்படி  காட்பாடி காற்று மாசு சதவீதம் 190 ஐ தாண்டியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அதிகரித்து வரும் மாசுபாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த மாதத் தொடக்கத்திலிருந்து காற்று மாசுபாடு மேலும் அதிகரித்து இருக்கிறது. 

அந்த நாட்டின் காட்டுப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ விவசாய நிலங்களை எரிப்பது ஆகியவைதான் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என நேபாள அரசு குற்றம் சாட்டி இருக்கிறது. கட்டுமான பகுதிகளிலிருந்து பரவும் தூசி செங்கல் சூளைகள், நிலக்கரி மற்றும் பராமரிக்கப்படாத வாகனங்களிலிருந்து வரும் புகை ஆகியவை காட்மண்டு நகரை சூழ்ந்து கொண்டுள்ளன. 

இது போன்ற மோசமான புகையினை நீண்ட நாட்கள் சுவாசிப்பதால் புற்றுநோய் மற்றும் காச நோய் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் எப்போதும் வீட்டிலிருந்து வெளியேறும் போது முக கவசம் அணிந்து இந்த மாசடைந்து காற்றிலே நேரடியாக சுவாசிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepal capital Kathmandu tops the list of most polluted cities


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->