தொடரும் சோகம் - நீட் பயிற்சி பெற்ற மாணவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் ஜே.இ.இ, நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால், இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் தங்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

அப்படி பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாரத் குமார் ராஜ்புட் என்ற மாணவர், கோட்டாவில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் தங்கி, கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

இவருடன் அவரது உறவினர் ரோகித் என்பவரும் தங்கியிருந்து நீட் தேர்வுக்காக படித்து வந்துள்ளார். இதையடுத்து பாரத் இன்று காலை 10.30 மணியளவில் ரோகித் வெளியே சென்றிருந்த சமயத்தில், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரோகித் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். 

அதன் படி, போலீசார் விரைந்து வந்து பாரத் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையில் போலீசார் நடத்திய சோதனையில், பாரத் குமார் தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், "மன்னித்துவிடுங்கள் அப்பா, என்னால் இந்த முறையும் வெற்றி பெற முடியாது" என்று எழுதப்பட்டுள்ளது. கோட்டாவில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

neet coaching student sucide in rajasthan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->