ஆம்பூரில் 17 லட்சம் பணம் பறிமுதல்.. ஹவாலா பணமா? வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பு!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பணம் பறிமுதல்.

 ஆம்பூர் பேருந்து நிலையில் ரூ.17 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற நபரிடம் இருந்து பணத்தைப் பறிக்க இரண்டு பேர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இரு நபர்களிடம் இருந்தும் போராடி பணத்தை மீட்டு உள்ளார். திருடர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

மீண்டும் திருடர்களிடம் பணத்தை ஏந்து விடுவோமோ என்ற பயத்தில் அந்த நபர், பணத்துடன் காவல் நிலையம் வந்து, தன்னிடம் இருவது பணத்தை பறிக்க முயற்சி செய்ததாகவும் முடியாமல் போனதால் செல்போனை பறித்து கொண்டு ஓடியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய ஆம்பூர் காவல் நிலைய அதிகாரிகள். விசாரணையில் புகார் அளித்த நபர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பைரோஸ் கான் (26) என்பதும் ரூ.17 லட்ச பணத்தை வேலூரை நோக்கி கொண்டு சென்றதாகவும், அவரைப் பின் தொடர்ந்த நபர்கள் பணத்தைப் பறிக்கும் முயற்சி செய்து முடியாமல் சென்றதால் செல்போனை பறித்து சென்றதாகவும் விசாரணையில் தேடி வந்தது.

பின்னர்,ரூ.17 பணம் யாருடையது, எப்படி அவர் கைக்கு வந்தது, காவல்துறையின் கேள்விக்கு உரிய பதிலளிக்காததால்  சந்தேகம் அடைந்த காவல்துறையினர் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது அவாலா பணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட காவல்துறையினர் வருமானத்துறை ஒப்படைக்க அந்த நபரையும் ரூ.17 லட்சம் பணத்தையும் சென்னைக்கு அழைத்து வந்து வருமானத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ambur 17 Lakh seized police handover incomtax office


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->