24 மணி நேர ஏசி வசதி…! - தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஏசி காத்திருப்பு அறை அறிமுகம் ...! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரெயில் நிலையம் பயணிகளுக்கு இனி காத்திருப்பது சிரமமல்ல, சுகமாக மாறியுள்ளது. தென்னக ரெயில்வே சார்பில், நீண்ட தூரப் பயணிகளை கருத்தில் கொண்டு, கட்டண அடிப்படையில் செயல்படும் நவீன குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

அங்கு முழுவதும் ஏசி வசதியுடன், அழகான உள் அலங்காரம் செய்யப்பட்ட இந்த அறை, விமான நிலைய லவுஞ்ச் தரத்தை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்மையான சோபா செட்கள், சாய்வு இருக்கைகள், சுத்தமான சூழல் பயண சோர்வை மறக்கச் செய்யும் வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில்.

அதுமட்டுமின்றி,பெண்கள், ஆண்கள் என தனித்தனியாக நவீன கழிப்பறைகள், மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள், இலவச வை-பை, குடிநீர் வசதி, பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை போன்ற சேவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்த ஏசி லவுஞ்சை பயன்படுத்த, ஒரு மணி நேரத்திற்கு வெறும் ரூ.35 மட்டுமே கட்டணம். முன்பதிவு தேவையில்லை நேரடியாகச் சென்று கட்டணம் செலுத்தி உடனே பயன்படுத்தலாம்.

குறிப்பாக உறுதி செய்யப்பட்ட அல்லது RAC டிக்கெட் வைத்துள்ள எந்த வகுப்பு பயணிகளும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

24 hour AC facility AC waiting room introduced at Tambaram railway station


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->