தமிழகத்தில் வறண்ட வானிலை தொடர்ச்சி…! அதிகாலை பனிமூட்டம்,மதியம் வெயில் சுடும் எச்சரிக்கை! -வானிலை மையம் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


இந்தியப் பெருங்கடல் கிழக்குப் பகுதி மற்றும் வங்கக் கடல் தென்கிழக்குப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால், அந்தப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

இதன் தாக்கம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன.கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மாநிலத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.இதற்கிடையில், சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு,சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை மிதமான பனிமூட்டம் நிலவியது.அதேபோல் அடுத்த சில நாட்களும் அதிகாலை நேரங்களில் மிதமான முதல் லேசான பனிமூட்டம் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பகல் நேரங்களில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்பதால், வெயில் தாக்கமும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dry weather continues Tamil Nadu Foggy morning scorching heat warning afternoon Meteorological Center announcement


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->