மோகன்லால் நடித்த ''எம்புரான்'' திரைப்படத்தின் நியூ போஸ்டர்! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
Empuraan Movie New Poster
மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் மோகன்லால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மலை கோட்டை வாலிபன்' ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெறவில்லை என்றாலும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால் பிரித்விராஜ் இயக்கத்தில் ''எம்புரான்'' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் என்ற திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இன்று மோகன்லால் பிறந்தநாள் என்பதால் ''எம்புரான்'' திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த திரைப்படம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் நியூ போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Empuraan Movie New Poster