தொடரும் வெற்றி... சர்வதேச திரைப்பட விழா மேடையில் ''நடிகர் சூரி''யின் திரைப்படம்.!  - Seithipunal
Seithipunal


பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''கோட்டுக்காளி''. இதில் மலையாள நடிகையான அன்னா பென் நடித்துள்ளார். 

தி லிட்டில் வேவ் ப்ரோடுக்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகி உள்ளது. 

அதாவது ருமேனியாவில் நடைபெற உள்ள டிரான்சில்வேனியா என்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'கோட்டுக்காளி' திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. 

இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த திரைப்படம் 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி திரையிடப்பட்டது. 

இதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ் படம் என்று பெருமையை 'கோட்டுக்காளி' திரைப்படம் பெற்றுள்ளது. 

இதனை அடுத்து  டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதால் இந்த திரைப்படம் தொடர்ந்து சர்வதேச அங்கீகாரம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soori kottukkaali international film festival


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->