உ.பி : குற்றவாளிகளை அடையாளம் காட்டிய கிளி.! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சர்மா மனைவி நீளம் சர்மா. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் சர்மா சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி, போலீசார் விரைந்து வந்து நீளம் சர்மாவின் உடலை மீது பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நேரத்தில், விஜய் சர்மா வீட்டில் இருந்த கிளி நீளம் சர்மா இறந்த பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்துள்ளது. இதனால், விஜய் சர்மாவிற்கு ஒருவேளை கிளி கொலையாளியை நேரில் பார்த்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் விஜய் கொலை சம்பந்தமாகச் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வந்த பொழுது தனது மருமகன் ஆசு பெயரைக் கூறியுள்ளார். அப்போது அந்த கிளி ஆவேசம் அடைந்து ஆசு, ஆசு எனக் கத்தியுள்ளது.

இது குறித்து விஜய் சர்மா காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் நேரில் வந்த போது அவர்கள் முன்பும் அந்த கிளி அவரது பெயரைக் கூறியுள்ளது. இதன் படி, போலீசார் ஆசுவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது ஆசு நீலம் சர்மாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கிடையே இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதனை விசாரணை செய்த நீதிபதி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து இருவருக்கும் தலா 72,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh two accuest arrested for murder case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->