உ.பி : மூதாட்டிகளைக் குறிவைத்து கொலை செய்யும் மர்ம நபர் - தீவிர தேடலில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இது தொடர்பாக ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

போலீசார் சார்பில், அந்த மர்ம நபரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அதில், தகவல் தெரிந்தவர்கள் போலீசிடம் தெரிவிக்கலாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே மூன்று படுகொலைகள் நடந்துள்ளதனால், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை நீக்கி விட்டு, மற்றொரு அதிகாரி ஒருவரை பாராபங்கி எஸ்.பி. நியமித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி அயோத்தியா மாவட்டத்தில் உள்ள குஷெட்டி கிராமத்தில் 60 வயதுடைய மூதாட்டி ஒருவர், ஒரு வேலையாக வெளியே சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததனால், போலீசில் புகார் அளித்தனர். 

இதற்கடுத்த நாள், அந்த பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் பெண்ணின் உடல் ஒன்றை போலீசார் மீட்டனர். அந்த உடலில் தலை மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் முடிவில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. 

இதேபோன்று, பாராபங்கி மாவட்டத்தில் வயல்வெளி ஒன்றில் இருந்து 62-வயது பெண்ணின் உடல் ஒன்றையும் போலீசார் மீட்டனர். அதேபோன்று இந்த மூதாட்டியும் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி தாத்தர்ஹா கிராமத்தில் 55 வயது மூதாட்டி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதேபோன்று கொல்லப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாராபங்கி மற்றும் அருகேயுள்ள காவல் நிலையங்களில் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு, இதைத் தொடர்ந்து வேறு சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near uttar pradesh three old womans kill


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->