உ.பி : தண்டவாளத்தில் தராசை வீசிய போலீசார் - சிறுவனுக்கு கால் இழப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் கல்யாண்பூர் பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே இர்பான் என்ற 17 வயது சிறுவன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வந்தபோது, தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துக்கொண்டிருந்த இர்பானை கடையை காலி செய்யும்படி தெரிவித்த போலீசார் சிறுவன் வைத்திருந்த பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை தூக்கி தண்டவாளத்தில் வீசினர். 

இதையடுத்து, இர்பான் தண்டவாளத்தில் வீசிய தராசை எடுக்க சென்றபோது, வேகமாக வந்த ரெயில் இர்பான் காலில் மோதியதில், இர்பானின் கால் சம்பவ இடத்திலேயே துண்டானது. வழியில் அலறி துடித்த இர்பானை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு இர்பானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இழந்த காலை மீண்டும் பொறுத்தமுடியவில்லை. இதனால், இர்பான் தனது காலை இழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தராசை தண்டவாளத்தில் வீசி சிறுவனின் கால் இழப்பதற்கு காரணமான தலைமை காவலர் ராகேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுந்தது. 

அதன் படி, தலைமை காவலர் ராகேஷ் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தீவிர விசாரணைக்கு பிறகு ராகேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh police threw weight meachine in railway trake children loss leg


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->