உ.பி - மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகனை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹுசைங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிட்டிசாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகிஷோர் லோதி. இவருக்கு மூன்று வயதில் ராஜ் என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்திரகிஷோர் லோதி, மது போதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த சந்திரகிஷோர் லோதி தனது மகனை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்து, பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக விவசாய வயலில் புதைத்துள்ளார். 

இதனால், கதறி அழுத அவருடைய மனைவி, சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் சந்திரகிஷோரை கைது செய்தனர்.

அதன் பின்னர் வயலில் புதைத்திருந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh father kill son for wife fight


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal