வரதட்சணையில் பழைய பொருட்களை கொடுத்ததாக திருமணத்தை நிறுத்திய மணமகன்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன் படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வராமல் புறக்கணித்துள்ளனர். இதனால் மணமகள் வீட்டார் திருமணம் நின்ற அதிர்ச்சியில் இருந்துள்ளனர். 

இதையடுத்து, திருமணம் நின்றது தொடர்பாக பெண் வீட்டார் விசாரணை செய்ததில், பெண் வீட்டினர் மணமகனுக்கு வரதட்சணையாக அளித்த பொருட்களில் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருட்களையும் கொடுத்துள்ளதாக மாப்பிள்ளையின் தந்தை குற்றம் சாட்டி திருமணத்தை நிறுத்தியது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 'நிச்சயம் செய்த படி பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து  உறவினர்கள், விருந்தினர்கள் எல்லாரையும் அழைத்தேன். 

ஆனால், மாப்பிள்ளை திருமணத்திற்கு வரவே இல்லை. அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது மாப்பிள்ளையின் தந்தை என்னை தகாத முறையில் நடத்தி, அவர்கள் கேட்ட பொருட்களை நாங்கள் தரவில்லை எனவும், பழைய பர்னீச்சர்களை கொடுத்ததாகவும் மாப்பிள்ளை வீட்டார் குற்றம் சாட்டினார். 

மேலும், மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near telungana groom stop marriage for old furniture in dowry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->