தெலுங்கானா : கொள்ளையடித்த பணத்தை சாலையில் கொட்டி சென்ற கும்பல்.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜக்தியால் மாவட்டம் கொருட்லா நகரில் 4 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். அப்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அலாரம் அடித்துள்ளது.

அதே சமயம் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இந்த அலாரம் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால், அந்த கும்பல் காரில் ஏறி தப்பித்துச் சென்றனர்.

இதைப்பார்த்த போலீசார் அந்தக் கும்பலின் காரைப் பின் தொடர்ந்து சென்று கும்பலின் காரின் மீது மோதி அவர்களை மடக்கி பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால், அந்த கும்பல் நிற்காமல் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆர் பிரகாஷ் தெரிவித்ததாவது, "மொத்தம் 19 லட்சம் ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. திருட்டு சம்பத்தில் ஈடுபட்ட கும்பலைப் பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near telungana four peoples steal atm money throw on road


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->