தெலுங்கானா பாஜக எம்.பி வீட்டைத் தாக்கிய மர்ம கும்பல்.! பின்னணியில் டி.ஆர். எஸ் இருக்குமா? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யான அரவிந்த் தர்மபுரியின் வீட்டின் மீது நேற்று மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது. 

இந்தத் தாக்குதல் குறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்ததாவது, "தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை சேர்ந்த குண்டர்கள், சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ் மற்றும் மகள் கவிதா உள்ளிட்டோரின் உத்தரவின் படி, ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தின் மீது மர்ம கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். 

எனது வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கி, எனது தாயாரையும் பயமுறுத்தி, வீட்டை சூறையாடியதுடன், அவரை மிரட்டியும் சென்றுள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க. எம்.பி, தெரிவித்ததாவது, "தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் மகளான கவிதாவை தாக்கியும்,  காங்கிரசில் இணையும்படி கவிதாவிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார் என்றும், ஒட்டுமொத்த நாடும் கேலி செய்யக்கூடிய ஒரு முதலமைச்சர் என்று சந்திரசேகர ராவையும் தாக்கி பேசியுள்ளார். 

இந்நிலையில், கே.டி. ராமராவ், தனது சகோதரியை தன் பக்கம் இழுப்பதற்கு பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றசாட்டு குறித்து, பா.ஜ.க. எம்.பி. பேசும்போது, கவிதாவை வாங்கி நாங்கள் என்ன செய்ய போகிறோம்? கவிதாவை வாங்கி வர்த்தகம் செய்யும் கட்சி ஒன்றும் நாங்கள் நடத்தவில்லை என்று பேசி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார். 

இதற்கிடையே, எம்.பி.யின் வீடடின் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவத்தில், ஐதராபாத் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near telungana bjp mp home attack mysterious gang


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->