மணிப்பூர் : கால்பந்து போட்டி கொண்டாட்டத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் மாவட்டத்தில் சிங்ஜமே நகரத்தைச் சேர்ந்தவர் இபேடோம்பி. இவர் நேற்று முன்தினம் இரவு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை தனது வீட்டிலிருந்து டி.வி.யில் பார்த்துவிட்டு பின்னர் தனது அறைக்கு உறங்கச் சென்றுள்ளார். 

அப்போது அந்த பெண்ணின் மார்பில் திடீரென ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதனால், தன்னை காப்பாற்றுமாறு கத்திய அந்த பெண்ணின் சத்தம் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தனர். 

பிறகு வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அங்கு சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அச்சுகள் இருந்தன.

இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா பெற்ற வெற்றியை கொண்டாடுவதற்காக யாரோ துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக அந்தப் பெண் மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? என்று போலீசார் தீவிர விஷ்டாரனை செய்து வருகின்றனர். 

இதற்கிடையே, பெண்ணை துப்பாக்கியால் சுட்டவர்களை கைது செய்யும் வரை, அவருடைய உடலை வாங்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near manipur woman died for gun shoot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->