6 வினாடி.. 600 கிலோ.. தரைமட்டமான சாந்தினி சவுக் மேம்பாலம்.! - Seithipunal
Seithipunal


மாராட்டியம் மாநிலத்தில் உள்ள புனே நகரில் பழமையான சாந்தினி சவுக் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மும்பை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்த மிக முக்கிய சந்திப்பு பகுதியாகும். 

இந்த மேம்பால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று . இதன் காரணமாக அந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 

அந்த வகையில், நள்ளிரவு 1 மணியளவில் 50 மீட்டர் நீளமுள்ள அந்த பழமையான பாலத்தை வெடி வைத்து 6 வினாடிகளில் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் தரைமட்டமானதும் அதன் இடிபாடுகள் அகற்றும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பாலத்தை தகர்ப்பதற்காக சுமார் 600 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் சமீபத்தில் இரட்டைக் கோபுரங்களை தகர்த்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் நிறுவனம்தான், இந்தப் பாலத்தையும் தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra bridge broke for traffic


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->