பேஸ்புக்கில் பழகிய சிறுமியை கடத்தி சென்ற அரசு ஊழியர் கைது.!
near kerala govt employee arrested for girl kidnape case
கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கேரள அரசு போக்குவரத்து துறையில், பாறசாலை பகுதியில் மேற்பார்வை அதிகாரியாக வேலைபார்த்து வரும் இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும், முகநூலில் பலருடன் தொடர்பில் இருந்த இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பதினான்கு வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் அடிக்கடி பேச ஆரம்பித்துள்ளார். நாளடைவில் அவரை நேரில் சந்திக்கவும் தொடங்கினார்.

இந்நிலையில் அந்த சிறுமி திடீரென கடந்த மாதம் 3-ந் தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். இதையறிந்த அவருடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் சிறுமியை பிரகாஷ் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார், பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமியும், பிரகாசும் எர்ணாகுளம் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.
அதன் படி, போலீசார் அங்கு விரைந்து சென்று பிரகாசை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு ஊழியர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
near kerala govt employee arrested for girl kidnape case