கர்நாடகா : ஆம்புலன்ஸ் வர தாமதம் - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!   - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்டகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் யஷ்வந்த் - கவுரி. இவர்களின் மகன் ரோஷன். இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். 

இந்நிலையில், வழக்கம் போல் அங்கன்வாடிக்குச் சென்ற ரோஷன் அங்குள்ள சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்ததார். அங்குள்ள ஊழியர், குழந்தைகளை அழைத்து வருவதற்காக வெளியே சென்றிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அங்கன்வாடி வளாகத்திற்குள் நுழைந்து சிறுவன் ரோஷனை கடித்துள்ளது.

இதனால், சிறுவன் வாயில் நுரைத்தள்ளியப்படி உயிருக்கு போராடி கொண்டிருந்தான். இதை பார்த்த அங்கன்வாடி ஊழியர், சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி, அங்கன்வாடிக்கு விரைந்து வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், சிறுவனை ஹெட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சக்லேஷ்புராவிற்கு அழைத்து செல்லும்படி தெரிவித்தனர். அதன்படி பெற்றோர் ரோஷனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்சை அழைத்தனர். ஆனால் பலமணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. 

இதைத்தொடர்ந்து பெற்றோர் சிறுவனை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வந்ததையடுத்து, சிறுவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இதைக் கேட்டு கதறி அழுத பெற்றோர், சரியான நேரத்திற்கு ஆம்புலன்ஸ் வராததால் மகன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka boy died in snake bite and delay ambulance


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->