கர்நாடகா : கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன்.! 6 பேர் உயிரிழப்பு.!
near karnataga six peoples died and eighteen peoples injury for van accident
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம் சவதத்தியில் உள்ள எல்லம்மாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை உலகுந்து என்ற கிராமத்தை சேர்ந்த இருபத்து மூன்று பக்தர்கள் நடைபயணமாக புறப்பட்டனர்.

இவர்கள் சுஞ்சனூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று இவர்களை பார்த்ததும் நின்றது. வேனை நிறுத்திய ஓட்டுநர், அவர்களிடம் குழந்தைகள் நிறைய பேர் இருப்பதால் குறைந்த வாடகையில் கொண்டு சென்று சவதத்தி கோவிலில் விடுவதாக தெரிவித்தார்.
இதைக்கேட்ட பக்தர்கள் அனைவரும் குழந்தைகளுடன் அந்த சரக்கு வேனில் ஏறினர். இந்த வேன் புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரமாக இருந்த ஆலமரத்தின் மீது பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி வேனின் ஓட்டுநர் உள்பட பதினெட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
near karnataga six peoples died and eighteen peoples injury for van accident