லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட போலீசார்.! பணத்தை அவசரமாக விழுங்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தைச் சேர்ந்த ஷுப்நாத் என்பவரின் எருமை மாடு காணாமல் பொய் உள்ளது. இதுகுறித்து ஷுப்நாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு துணை காவலர் மாட்டை கண்டுபிடிக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று அவரிடம் தெரிவித்துள்ளார். 

அதன் படி, முதலில் 6000 ரூபாய் கொடுத்த அவர், மீதமுள்ள தொகையை கொடுப்பதற்கு முன்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த தகவலின் படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் போலீசாரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக ஷுப்நாத்தை காவல் நிலையத்திற்கு அனுப்பி மீதமுள்ள பணத்தை போலீசாரிடம் கொடுக்க வைத்தனர். 

அதன் படி, துணை தலைமை காவலர் பணத்தை வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதை எதிர்பார்க்காததுணை தலைமை காவலர் லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சி செய்துள்ளார். இதை பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வாயில் இருந்த அந்த பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தனர்.

இருப்பினும் அவர்களால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை என்பதால், இறுதியில் அவரை காரில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்த  வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "லஞ்சம் வாங்கிய போலீஸ் துணை தலைமை காவலரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்து பணத்தை கைப்பற்ற முயற்சி செய்வதும், அந்த பணத்தை அவசரம் அவசரமாக போலீஸ் அதிகாரி விழுங்குவதுமாக பதிவாகி உள்ளது. 

மேலும் அந்த வீடியோவில், அதிகாரிகள் அந்த பணத்தை மீட்க போராடுகின்றனர். அவர்களில் ஒருவர் பணத்தை மீட்பதற்காக போலீசாரின் வாயில் விரல்களை வைக்கிறார். ஆனால் போலீசார் வாயை திறக்காமல் பணத்தை அப்படியே விழுங்குகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near hariyaana Police swallowed money were caught while taking a bribe


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->