காதலி பேச மறுத்ததால் தாண்டவாளத்தில் தலை வைத்து உயிரிழந்த வாலிபர் - போலீசார் விசாரணை.!
near chengalpattu young man sucide in railway track
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி அந்தோதியா விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரெயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வாலிபரின், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் கூடுவாஞ்சேரி முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவி மகன் பரணி என்பது தெரிய வந்தது. பத்தொன்பது வயதுடைய இவர் கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.

இதற்காக அவரது பெற்றோர்கள் அவரை போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சை பெற அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து பரணி சமீபத்தில் தான் அங்கிருந்து வந்துள்ளார். பின்னர் தனது காதலியை சந்தித்து பேசுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், காதலி பயணியிடம் பேச மறுத்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த பரணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near chengalpattu young man sucide in railway track