அசாம் : சந்தையில் திடீர் தீ விபத்து - 150 க்கும் மேற்பட்ட கடைகள் சேதம்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டம் சௌக் பஜாரில் உள்ள சந்தையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 150 கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களால் தீய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, "ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவினால், தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்து உள்ள கடைகளுக்கும், மிக வேகமாக பரவியது. இந்த தீ விபத்து நள்ளிரவு ஏற்பட்ட தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாவது, "சாலைகள் குறுகலாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் தீ அடுத்தடுத்து அனைத்து கடைக்கும் பரவியுள்ளது" என்றுத் தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near assam 150 shops damage for fire accident in market


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->