அருணாசல பிரேதசம் : ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அருணாசலபிரதேசத்தில் உள்ள கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி உள்ளிட்டோர் சென்றனர். 

இதையடுத்து இந்த ஹெலிகாப்டர் பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர். 

அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை தேடியுள்ளனர். பல மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் விழுந்து கிடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு, ஹெலிகாப்டர் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. 

இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தியதில், அவர்களின் பெயர்கள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்தது. 

மேலும், விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், விமானி மேஜர் ஜெயந்தின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near arunachalapirathesam two peoples died for helicopter accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->