தேசிய கொடி நிறத்தில் மின்னும் தஞ்சை பெரிய கோவில்.!!
national flag colour lights in thanjai big temple
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்றத் தாக்குதலில் பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வெற்றியைப் பறைசாற்றும் வகையிலும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்திலும் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரகத்தில் திருச்சி மெயின்கார்டு கேட், தஞ்சாவூர் பெரிய கோவில், கன்னியாகுமரி வட்டக்கோட்டை ஆகியவற்றில் தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மின் விளக்குகள் பொருத்துமாறு துறையின் தலைமையகம் அறிவுறுத்தியது.
அந்த அறிவுரையின் படி தஞ்சாவூர் பெரிய கோவிலில் இரண்டாவது நுழைவுவாயிலான ராஜராஜன் வாயில் முன்புறம் இடதுபுற மதில் சுவரில் சிகப்பு வண்ணத்திலும், ராஜராஜன் கோபுரத்தில் வெள்ளை நிறத்திலும், வலதுபுற மதில் சுவரில் பச்சை நிறத்திலும் இருக்கும் படி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, எரிய விடப்பட்டுள்ளன.
தினமும் மாலை முதல் இரவு வரை எரியும் இந்த மூவர்ண மின் விளக்குகள் சில நாட்களுக்கு தொடரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதனால் தஞ்சாவூர் பெரிய கோவில் தேசிய கொடி நிறம் போல் அழகாக காட்சியளிக்கிறது.
English Summary
national flag colour lights in thanjai big temple