புதிய கட்சியைத் தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!!
porkodi armstrong start new political party
கடந்த ஆண்டு சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. அதன் படி இன்று காலை தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி நடந்தது. இந்த ஊர்வலத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் தாயார் கமலா கவாய் மற்றும் புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்ததுடன் அதன் கொடியையும் அறிமுகம் செய்து அதனை 32 அடி உயர கம்பத்தில் ஏற்றினார்.
அந்தக் கோடி யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வதுபோல் நீலம், வெண்மை நிறத்தில் உள்ளது.
English Summary
porkodi armstrong start new political party