கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய மாநாடு இன்று தொடங்கி வைக்கிறார்.. மத்திய அமைச்சர் அமித் ஷா.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒரு நாள் தேசிய மாநாடு இன்று நடைபெற உள்ளது.

கூட்டுறவு அமைச்சகம் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய கூட்டமைப்பு சார்பில் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் ஒரு நாள் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டின் நிறைவில் மத்திய கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் பி.எல்.வர்மா உரையாற்றுகிறார். 

இந்த மாநாட்டில் , மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு செயல்திறன் விருதுகள் வழங்கப்படும். மேலும், 100 வருட சேவைக்காக குறுகிய கால கூட்டுறவு கடன் சங்கங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்ட உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Conference on Rural Cooperative Banks begins today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->