3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்.? - Seithipunal
Seithipunal


நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் 5 ஆண்டுகால ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், இதனையடுத்து 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலிலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அந்த வகையில் 60 தொகுதிகளை திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோன்று 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், 60 தொகுதிகளை கொண்ட மேகலாயா மாநிலத்தில் 59 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. அதன்படி, சோகியாங் எனும் சட்டசபை தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர் ஒருவர் இறந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில், திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், 3 மாநிலங்களிலும் பதிவன வாக்குகள் இன்று (மார்ச் 2-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதில், திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மேலும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் ஆளும் கட்சியில் பாஜக கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagaland Meghalaya and Tripura assembly election results today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->