செல்போன் லாரியை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் கொள்ளையர்கள் ரூ. 14 கோடி மதிப்பிலான செல்போன்களுடன் உள்ள லாரியை கடத்திச் செல்ல முயன்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் சாகர் மாவட்டத்திலிருந்து ரூ. பல கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி தமிழ்நாடு, ஆந்திரா வழியாக அரியானா மாநிலம் குருகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அடையாளம் தெரியாத நான்கு கொள்ளையர்கள் அந்த லாரியை தேசிய நெடுஞ்சாலை மகராஜ்பூர் கிராமத்திற்கு அருகே கடத்திச் சென்று கொள்ளையடித்த செல்போன்களை வேறு லாரிக்கு மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மத்திய பிரதேச போலீசார் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனை சாவடியில் இந்த லாரியைத் தடுத்து நிறுத்தினர். அப்போது லாரியிலிருந்து 4 கொள்ளையர்கள் தப்பிச்சென்ற நிலையில், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சாகர் மாவட்டத்தில் உள்ள கூர்ஜமர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நான்கு கொள்ளையர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரானை மேற்கொண்டு வருகின்றனர். 24 மணி நேரத்தில் மிகவும் துரிதமாக செயல்பட்ட போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mysterious persons hijacked the cell phone truck


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->