சீரம் அமைப்பிடம் பண மோசடி செய்த மர்ம நபர்கள்..! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலத்தில் புனே நகரில் உள்ள சீரம் அமைப்பு கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆதார் பூனாவல்லா இருந்து வருகிறார். 

சீரம் அமைப்பின் இயக்குனர்களில் ஒருவராக சதீஷ் தேஷ்பாண்டே என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் பூனாவல்லா என்ற பெயரில் தங்களை அடையாளம் காட்டி கொண்ட  தேஷ்பாண்டேவுக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் அனுப்பி, பல்வேறு வங்கி கணக்குகளில் உடனடியாக பணபரிமாற்றம் செய்யும்படி கேட்டனர்.

இதை, உண்மை என்று கருதி, ரூ.1 கோடியே ஒரு லட்சத்து ஆயிரத்து 554 வரை நிறுவனத்தின் நிதி துறையிடம் இருந்து அந்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளனர். இதன் பின்னரே பெரிய மோசடி நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. 

பூனாவல்லா, பணபரிமாற்றம் செய்யவோ அல்லது அதுபற்றி வாட்ஸ்அப் தகவல் அனுப்பவோ இல்லை என தெரிய வந்ததும், பணமோசடி பற்றி பந்த்கார்டன் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி புனே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious person cheated serum organization


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->