'பீஹாரை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவது மற்றும் ஊழல் இல்லாத அரசை உறுதி செய்வதே என் கனவு': தேஜஸ்வி யாதவ்..! - Seithipunal
Seithipunal


'பீஹாரை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதும், ஊழல் இல்லாத அரசை உறுதி செய்வதும் தனது கனவு என இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: எனக்கு ஒரே ஒரு கனவுதான் இருக்கிறது. பீஹாரை நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உட்பட அனைத்து துறைகளில் சிறந்து விளங்கும், நடவடிக்கை எடுக்கும், மக்களின் குரலைக் கேட்கும் ஒரு அரசு பீஹாரில் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அத்துடன், சிகிச்சைக்கோ அல்லது வேலைக்கோ யாரும் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பீஹாரில் எங்கள் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒரு முதல்வராக, குற்றம் எதுவும் நடக்காமல் இருப்பதை நான் உறுதி செய்வேன் என்றும், ஊழல் இல்லாத அரசை உறுதி செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும்,  ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்க மாட்டார் என்றும், பீஹாரில் ஊழல் தலைவர்கள் மற்றும் குற்றவாளிகளை மத்திய அரசு பாதுகாக்கிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், ஒரு பீஹாரியாக, எனது மாநிலம் ஏழ்மை நிலையில் இருப்பதும், வேலையின்மை, ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதும் எனக்கு வேதனை அளிக்கிறது என்றும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். பீஹாரில் 20 ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்த போதிலும், மாநிலத்தின் தனிநபர் வருமானம் மிகக் குறைவு என்றும், விவசாயிகள் ஏழைகளாகவே உள்ளதாகவும், பிரதமர் மோடியே நிதிஷ் குமார் மீது 55 வழக்குகளை கணக்கிட்டார். ஆனால் அவர் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காட்டு ராஜ்ஜியம் என்பது குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டு ஆதரிக்கப்படும் இடமாகும் எனவும், மேலும் பீஹாரில் பாலியல் வன்கொடுமை, கொலை, ஊழல் மற்றும் பிற குற்றங்கள் நடக்காத ஒரு நாள் கூட கடக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, அவர்கள் குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்து பீஹாரில் வெற்றியை எதிர்பார்க்கிறார்கள் என்று தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

My dream is to make Bihar the number one state and ensure a corruption free government Tejashwi Yadav


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->