ஒத்த போன்கால்! தாயும், மகளும் துடிதுடிக்க எடுத்த விபரீத முடிவால் பெரும் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


கேரளா திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 19 வயதில் வைஷ்ணவி என்ற மகள் உள்ளார். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

இந்நிலையில் வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த சந்திரன் வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து சந்திரன் தனது செல்ல மகளின் பெயரில் ஆசை ஆசையாக வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் சந்திரனுக்கு திடீரென உடல்நிலை சரிஇல்லாமல்போன காரணத்தினால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அதனால் அவரால் வங்கியில் சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை.

 இந்நிலையில் வங்கி ஊழியர்கள் 6.80 லட்சம் செலுத்த வேண்டுமென அடிக்கடி நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த சந்திரன் கடன் கட்டுவதற்காக தனது வீட்டையும் நிலத்தையும் விற்பதற்காக முடிவு செய்துள்ளார். இதனால் மே 14ம் தேதி கடனை அடைப்பதாக ஊழியர்களிடம் உறுதி அளித்துள்ளனர்.

அனால் சொன்னபடிசரியான நேரத்தில்  பணம் கட்ட முடியாத நிலையில் வங்கி ஊழியர்கள் போன் செய்து உங்கள் சொத்துக்களை கைப்பற்ற போகிறோம், அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டோம் என கூறியுள்ளனர்.. இதனால் மனமுடைந்த லதா மற்றும் வைஷ்ணவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் லதாவையும், வைஷ்ணவியையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால்  மருத்துவமனைக்கு செல்லும்வழியிலேயே வைஷ்ணவி மரணமடைந்தார். லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பது வந்தநிலையில் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

mother and daughter commit suicide for bank loan


கருத்துக் கணிப்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்!
கருத்துக் கணிப்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்!
Seithipunal