வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 - பீகார் முதல்வர் அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களாகவே சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

முதலில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை 400 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாக அதிகரிப்பதாகவும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் கல்விக் கடன்​களுக்கு வட்டி தள்​ளு​படி செய்​தும், மாணவர்​கள் கல்வி கடனை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான கால​மும் அதி​கரிக்​கப்​படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் தனது எக்ஸ் தளத்​தில் தெரிவித்து இருப்​ப​தாவது:, பீகாரில் வேலை வாய்ப்பற்ற 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பீகார் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

monthly 1000rs send to without work youths in bihar


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->