'கீதையை ஆழமாக புரிந்து கொண்டால், நமது எல்லா சூழ்நிலைகளுக்கும் வழிகாட்டுதலை வழங்கும்'; மோகன் பகவத்..! - Seithipunal
Seithipunal


உலகெங்கிலும் உள்ள அனைத்து மரபுகள் மற்றும் அறிவு, கடந்த கால மற்றும் எதிர்காலம் ஆகியவை பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களில் வழங்கப்பட்டுள்ளது என்றும் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாறுகையில் அவர் கூறியதாவது: '1857-ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது துணிச்சலான வீரர்கள், தங்கள் வாழ்நாளில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்படுவதைக் காணவில்லை. இன்று எல்லாவற்றையும் லாப, நஷ்டத்தால் மக்கள் அளவிடுகிறார்கள். ஆனால், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் என்ன பெற்றார்...? ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்த அவர் இறுதியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அது தான் நாம் விரும்பும் வாழ்க்கையா? ஆனாலும், அது தலைமுறை தலைமுறையாக நாம் நினைவில் வைத்திருக்கும் ஒரு வாழ்க்கை. தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் ஒரு வாழ்க்கை.' என்று பேசியுள்ளார். 

அத்துடன் அவர் குறிப்பிடுகையில்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த போர்களைப் போலவே இன்றும் போர்கள் நடக்கின்றதாவும், அப்போது இருந்ததைப் போல இன்றும் குற்றங்கள், பேராசை மற்றும் அனைத்தும் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார். மேலும், நாம் அனைவரும், ஹிந்து சமூகம் மற்றும் ஹிந்து ராஷ்டிரத்தின் மக்கள். நாம் தர்மத்தை பின்பற்ற வேண்டும். நமது கடமைகளைச் செய்ய வேண்டும். உலகிற்கு சேவை மற்றும் தியாகத்தின் செய்திகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து மரபுகள் மற்றும் அறிவு, கடந்த கால மற்றும் எதிர்காலம் ஆகியவை பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களில் வழங்கப்பட்டுள்ளது என்றும் மோகன் பகவத் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அனைவரும் பகவத் கீதையை அதன் உண்மையான வடிவத்தில் படிக்க வேண்டும். அதனை ஆழமாக புரிந்து கொண்டால், அனைத்தும் தெளிவாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கீதையின் ஒரு சிறப்புத் தன்மை என்னவென்றால், நீங்கள் அதைப்பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமான ஒன்றை, புதிதாக கண்டுபிடிப்பீர்கள் என்றும், அது எல்லாவற்றையும் கொண்டுள்ளது. எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளுக்கும் கீதை வழிகாட்டுதலை வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், செல்வமும், செழிப்பும் பெருமளவில் பெருகியுள்ள இலையில், வாழ்க்கையில் ஒழுக்கம், அமைதி மற்றும் மனநிறைவு மற்றும் உண்மையான ஓய்வு இல்லை என்றும் கூறியதோடு, மக்கள் தங்கள் பாதையில் வெகுதூரம் முன்னேறிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், அது இன்னும் தவறான பாதை என்று உணர்கிறார்கள். சரியான பாதையை இந்தியாவில் மட்டுமே காண முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mohan Bhagwat says the Gita provides guidance for all our situations


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->