#Breaking : புதியகல்விக்கொள்கை மாற்றம் எதற்காக?.. பிரதமர் மோடி விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


புதியகல்விக்கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தாவது, " இந்தியாவின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் என நம்பிக்கை இருக்கிறது. 

இந்தியாவின் கற்பித்தல் மற்றும் கற்றல் மாற்றம் பெறும். புதிய கல்விக் கொள்கை மூலமாக புத்தகம் மட்டுமல்ல, பேனா போன்ற பொருட்கள் சுமந்து செல்வதும் தவிர்க்கப்படும். புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. 

21ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் உயர் கல்வியில் இடைநிற்றலை முற்றாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பை தேடாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆற்றலாக மாணவர்கள் உருவாக்கப்படுவதே இதன் இலக்காகும். கூர்மையான அறிவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் முறையிலேயே கற்றல் சிறந்த ஒன்றாகும். கற்றல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi Speech about Education Policy


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->