மோடி அரசு இந்தியர்களை வறுமையின் பிடியில் தள்ளியுள்ளது - ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இந்தியாவின் 40 சதவீத சொத்துகள், 1 சதவீதம் பெரும் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை குறிப்பிட்டு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக நேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

"நாட்டின் 40 சதவீத சொத்துகள், வெறும் 1 சதவீத பணக்காரர்களிடம் தான் உள்ளன. அதே நேரம், 50 சதவீத இந்தியர்கள் ஒட்டுமொத்தமாகவே நாட்டின் மூன்று சதவீத சொத்துகளைத்தான் வைத்துள்ளனர். 

பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை மற்றும் பணக்காரர் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து விட்டது. சாமானியர்கள் தொடர்ந்து பள்ளத்திலேயே தான் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை நிரப்பக்கூடிய இயக்கம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து இருப்பதாவது:-

"20 கோடி இந்தியர்களை வறுமையின் பிடியில் இருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விடுவித்தது. ஆனால், மோடி அரசு அவர்களை மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளி உள்ளது. 

இந்திய மக்களின் வறுமையை அதிகரித்துள்ளது. மோடி அரசின் இது போன்ற கொள்கைகளை எதிர்க்கும் மக்களின் குரலாக இந்திய ஒற்றுமை நடைபயணம் திகழ்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi govt pushed indian to poverty ragulgandhi speach


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->