ஜெனரேட்டரால் பற்றி எறிந்த செல்போன் கோபுரம் : ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள கனரா வங்கி அருகில் குடியிருப்பு பகுதியில்  தனியார் செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இந்த செல்போன் கோபுரத்துக்கு மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. 

இன்று மாலை இந்த ஜெனரேட்டருக்கு அதிக மின்னழுத்தம் ஏற்பட்டதால் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதிகளவு மின் ஒயர்கள் உள்ளதால் தீ ஓயர்களில் பரவி சரசரவென சுமார் 15 அடி தூரத்துக்கு கரும் புகையோடு எரிந்தது. 

இதனை பார்த்த பொது மக்கள் தங்கள் வீடுகளில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்தனர். இந்த கோபுரத்துக்கு அருகில் இருந்த மாடி வீட்டிற்கு செல்லும் தண்ணீர் குழாயில் தீ பட்டு குழாய் தீப்பற்றி எரிந்ததால் குழாய் உடைந்து அதிலிருந்து தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டதால், ஒரு பகுதியில் எரிந்த தீயினை அணைத்தது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் தீயுடன் போராடி தீயை அணைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mobilephone tower fire near dindukal


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->