அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் மாயமான.. "இந்திய மலையேற்ற வீராங்கனை" உயிருடன் கண்டுபிடிப்பு.!
Missing Indian trekker found alive in nepal
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பல்ஜீத் கவுர். இவர் மலையேற்றத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இதுவரை எவரெஸ்ட், அன்னபூர்ணா, கன்ஜன்ஜங்கா, லோட்சே ஆகிய 8,000 மீட்டர் உயரமுள்ள நான்கு மலைச்சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நேபாள நாட்டின் இமயமலை பகுதியான 8091 மீட்டர் உயரம் கொண்ட அன்னப்பூர்னா சிகரத்தில் தனி ஆளாக ஏறி சாதனை படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து மலையிலிருந்து கீழே இறங்கத் தொடங்கும் பொழுது மலைத்தொடரின் நான்காம் முகாமிற்கு அருகே வரும் பொழுது மாயமானார்.
சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக பல்ஜீத் கவுரின் இருப்பிடம் குறித்து எந்த வித தகவலும் இல்லாத நிலையில், நேற்று அதிகாலை பல்ஜீத் கவுர் உடனடி உதவி கேட்டு ரேடியோ சிக்னலை அனுப்பியுள்ளார். இதையடுத்து பேரிடர் மீட்பு படையினர் மூன்று ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பல்ஜீத் கவுரின் இருப்பிடம் கண்டறியப்பட்டு அவரை மீட்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டன.
மேலும் வானிலை ஆய்வாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் எச்சரித்தும் பல்ஜீத் கவுர் ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
English Summary
Missing Indian trekker found alive in nepal