இந்தியாவில் 02-வது மிக நீளமான கேபிள் பாலம்: கர்நாடகாவில் அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைப்பு, சித்தராமையா நிகழ்வை புறக்கணிப்பு..!
Minister Nitin Gadkari inaugurates Indias 2nd longest cable stayed bridge in Karnataka
இந்தியாவின் 02-வது மிக நீளமான கேபிள் பாலத்தை கர்நாடகாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று திறந்து வைத்தார். கர்நாடகா சிவமோகாவில் உள்ள கலசவல்லி மற்றும் அம்பர்கொண்ட்லு நகரங்களை இணைக்கும் பலமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சர் நிதின் கட்கரி, சிவமோகா விமான நிலையத்திலிருந்து சாகரில் உள்ள மான்கலே ஹெலிபேடிற்கு வந்து, அங்கிருந்து சாலை வழியாக பாலத்தை அடைந்தார். அதன் பின்னர் பாலத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வை கர்நாடக முதல்வர் சித்தராமையா புறக்கணித்ததால் காங்கிரஸ் நிகழ்ச்சியைத் தவிர்த்தமை குறிப்பிடத்தக்கது.
சாகர் மற்றும் மரகுடிகா இடையே ஷராவதி நதியின் மீது இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 369-இல் வரும் இந்த பாலம் 6 கி.மீ., நீளம் கொண்டது. ரூ.473 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குறித்த கேபிள் பாலம் புனித யாத்திரை மையமான சிகந்தூர் சவுடேஸ்வரி கோவிலுக்கு செல்ல இந்த பாலம் ஒரு முக்கியமான இணைப்புப் பாதையாகும்.
English Summary
Minister Nitin Gadkari inaugurates Indias 2nd longest cable stayed bridge in Karnataka