இனி மாதவிடாய் நாட்களில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு விடுமுறை.!  - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உயர்கல்வி படிக்கின்ற அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பல நாடுகளிலும் மாதவிடாய் நாட்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை பார்க்கும் இடம் உள்ளிட்டவற்றில் அவர்களுக்கு மூன்று நாட்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது. அதுபோல இந்தியாவிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் கேரள மாநிலம் கொச்சி பல்கலைக்கழக மாணவர்கள் இது குறித்து தலைமையிடம் கோரிக்கையை வைத்த நிலையில் அவர்களது கோரிக்கையை கொச்சிப் பல்கலைக்கழகம் ஏற்று மாதவிடாய் காலங்களில் பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து மாநிலம் முழுவதும் பேச்சு அடிபட துவங்கியது. இதனால், கேரளா அரசு ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது. அதில் 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கு பிரசவகால விடுமுறையும், மாதவிடாய் கால விடுமுறையும் அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரசவகால விடுமுறையாக 60 நாட்கள் விடுப்பு அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mensurable period Leave In Kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->