மாமனாரும், மருமகளும் சேர்ந்து செய்த காரியம்.! தற்கொலைக்கு முன்பு கணவனின் நெஞ்சை உருக்கும் சம்பவம்.!  
                                    
                                    
                                   Men suicide after video 
 
                                 
                               
                                
                                      
                                            தனது வளர்ப்புத் தந்தையும், கட்டிய மனைவியும் சேர்ந்து கொடுமை செய்ததாக குற்றம் சாட்டி குர்ஜந்த் சிங் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 
ராஜஸ்தானை சார்ந்த, இறந்துபோன குர்ஜாந்த் சிங் அவரது வளர்ப்பு தந்தையாலும், மனைவியாலும் மிகவும் துன்பப் படுத்தப்பட்டது கூறப்படுகிறது. வளர்ப்பு தந்தை தன்னுடைய மனைவியை தாக்க முயற்சித்த போதெல்லாம் குர்ஜாந்த் வந்து தடுத்துள்ளார். மேலும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குர்ஜாந்த் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். 
இதன் காரணமாக வளர்ப்பு மகன் மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தன்னை வளர்த்தவர் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட பின்னர் தன்னுடைய மாமியார் வீட்டில் குர்ஜாந்த் தங்கியுள்ளார். அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 
அவர் வெளியிட்ட வீடியோவில், " தன்னுடைய வளர்ப்பு தந்தை, மனைவி, மகள் உட்பட 5 பேர் தான் தனது சாவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்." என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் குற்றம் சாட்டிய 5 பேரும் தற்போது தலைமறைவாகி விட்டதால், அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.