#சற்றுமுன் | டெல்லியில் காங்கிரஸ் தலைவர் தலைமையில் அவசர ஆலோசனையில் சோனியா, ராகுல்!  - Seithipunal
Seithipunal


 

அவதூறாக பேசிய வழக்கில், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை ராகுல்காந்தி இழந்தார். 

அதே சமயத்தில் அவருக்கு 30 நாள் ஜாமின் வழங்கி, வழக்கில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

ராகுல்காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை கையிலெடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையில் கூட்டணி இல்லை என்று அறிவித்த கட்சிகள் கூட ஆதரவு தெரிவித்து ஓரணியில் ஒன்று திரண்டு வந்துள்ளன.

இந்நிலையில், டெல்லியில் சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ராஜ்யசபா லோபி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், ஒரே எண்ணம் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று மாலை, மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, ​​அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்யுமாறு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, லோக்சபா வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meeting of Opposition leaders Congress president Mallikarjun Kharge


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->