ஓடும் ரயிலில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் கை குழந்தையுடன் இருந்த பெண்ணை ஓடும் ரயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் இருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அலிப்பூர் துவார் என்ற பகுதிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் தனது கைக்கு குழந்தையுடன் பயணம் செய்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் அலிப்பூர் துவார் பகுதிக்கு சென்று இருக்கிறார். இந்த ரயில் அசாம் ஃபகிராகிராம் ரயில் நிலையத்தை அடைந்தபோது பெரும்பாலான பயணிகள் இறங்கிவிட்டனர். இதில் அந்த பெண், கை குழந்தையுடன் தனியாக இருந்திருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாய் இரண்டு இளைஞர்கள் அவரது கை குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரயில் அலிப்பூர் ஜங்ஷனை வந்தடைந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ரயில்வே போலீசாயிடும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நைனால் அப்துல் மற்றும் மைனூல் ஹக் என்ற 2 இளைஞர்களையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு போன்ற வழக்குகளை பதிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Married women raped in train Assam


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->