கர்நாடகாவில் பயங்கரம்.! மழைக்காக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வினோத வழிபாடு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் பயங்கரம்.! மழைக்காக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வினோத வழிபாடு.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஜூலை மாதத்தில் பெய்தது. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. 

இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. தற்போது நீர்பாசனத்திற்கு தண்ணீர் இருந்தாலும், இனி வரும் நாட்களில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று விவசாயிகள் பயந்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மழை வேண்டி கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பெட்டதமல்லேனஹள்ளி கிராமத்தில் உள்ள மக்கள் மழை வேண்டி உச்சம்மா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். 15 நாட்கள் இந்த வழிபாடு நடைபெற்ற நிலையில், இறுதி நாளான நேற்று முன்தினம் மழை வேண்டி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில், இரண்டு குழந்தைகளுக்கு மணமகன், மணமகள் வேடமிட்டு, கோவில் வளாகத்தில் அமர வைத்து சிறப்பு பூஜை செய்து, சம்பிரதாய முறைப்படி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். 

அவ்வாறு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் என்பதனைக் கருத்தில் கொண்டு அந்த கிராம மக்கள் இந்த சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage to childrens for come rain in karnataga


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->