நிச்சயதார்த்தம் மகனுடன், கல்யாணம் மாமனாருடன்.. பீகார் மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருமண மாப்பிள்ளை தனது காதலியுடன் ஓடியதால் மணப்பெண்ணுக்கு மாமனாரை திருமணம் வைத்த சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் ஸ்வப்னா என்ற 21 வயது பெண்ணுக்கும், ரோஷன் லால் என்ற 65 வயது நபரின் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண நேரத்தில் மாப்பிள்ளை தனது காதலியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். 

இதன் காரணமாக திருமணத்திற்கு வந்தவர்களும் இருதரப்பு குடும்ப உறவுகளும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாயினர். இதனைத் தொடர்ந்து ஸ்வப்னா வின் தந்தை தனது கௌரவத்தை காப்பதற்காக ஒரு கேவலமான செயலை செய்திருக்கிறார். அதாவது மகளை அந்த ஓடிப்போன மாப்பிள்ளையின் தந்தைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 

மணப்பெண் சுவப்னா வேறு வழி இல்லாமல் தந்தை பேச்சைக்கேட்டு மாமனாரை திருமணம் செய்து கொண்டார். "தனது கடமை முடிந்தால் போதும்" என்று வெட்டி கௌரவம் பார்க்கும் பெற்றோர்களுக்கு பெண்ணாய் பிறந்து, தனது மன எண்ணங்களை கொன்று புதைத்து எவரையோ திருப்திபடுத்த வாழும் ஒரு வாழ்க்கையை விட வாழ வெட்டியாய் இருப்பது நிம்மதி. 

இந்த சமூகத்தின் கௌரவ பசிக்கு இளைஞர்களின் வாழ்வு சூறையாடப்படும் நிகழ்வு எப்பொழுதுதான் முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Marriage in father in law in Bihar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->