ரத்த உறவு முறையில் திருமணம்.. தமிழகத்திற்கு முதலிடம்.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


ரத்த உறவு முறை கொண்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு, ரத்தசோகை அல்லது மரபணு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் தென்மாநிலங்களில் இரத்த உறவு திருமணம் தான் அதிகளவில் நடந்து வருகிறது. ரத்து உறவு திருமணங்களில் தமிழகம் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை கர்நாடக மாநிலம் பிடித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ரத்த உறவு திருமணங்கள் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதை தடுக்க இரத்த உறவுமுறை திருமணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தென்மாநிலங்களில் இரத்த உறவுமுறை திருமணங்களில் தமிழகத்தில் 28 சதவீதம் ரத்த உறவு முறை திருமணங்கள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் 27 சதவீதமும், ஆந்திராவில் 26 சதவீதமும், புதுச்சேரியில் 19 சதவீதமும், தெலுங்கானாவில் 18 சதவீதமும் ரத்த உறவு முறை திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marriage by blood relationship First place for Tamil Nadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->