இந்தியாவில் பல திருமணங்களை செய்வதில் இஸ்லாமியர்களை முந்திய கிருஸ்த்துவர்கள்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இஸ்லாமியர்களை விட அதிக அளவில் கிறிஸ்தவர்கள் தான் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்வதாக, மத்திய அரசின் கீழ் செயல்படும் சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் (ஐஐபிஎஸ்) நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை திருமணமான பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளின்படி, நாட்டில் பல திருமணங்களை செய்தவர்களின் பட்டியலில் கிறிஸ்துவ மதத்தினர் இரண்டு புள்ளி ஒரு சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் 1.9 சதவீதத்துடன் இஸ்லாமியர்கள் உள்ளனர். மூன்றாவது இடத்தில் 1.3% இந்துக்கள் இடம் பெற்றுள்ளனர். மிகக் குறைவான பலதார திருமணங்களை சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் செய்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது,

நாட்டில் அதிகபட்சமாக பஞ்சாப், சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்கண்ட், புதுச்சேரி, மேகாலயா, திரிபுரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பலதார திருமணங்கள் அதிகம் நடப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தென்னிந்தியாவை பொருத்தவரை தெலுங்கானாவில் 2.9 சதவீதத்தினரும், கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 2.4 சதவீதத்தினரும், தமிழகத்தில் இரண்டு சதவீதத்தினரும் பலதார திருமணங்களை செய்து உள்ளதாகவும், பெரும்பாலும் இவர்களில் இந்துக்களே அதிகம் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம், ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறது. இப்படியான சட்டம் இருந்தும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய லட்சத்தீவு மற்றும் காஷ்மீரில் குறைவான பலதார திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கிறிஸ்தவர்கள் முதலிடம் பிடிக்க காரணம், பெரும்பாலும் பழங்குடியின மக்களாக அவர்கள் இருப்பது தான் என்று இந்த  ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் ஒரே சட்டம் என்ற பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

many marriages list Christians number one position in India


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->