மணிப்பூர் விவகாரம் - சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் இரு இந மக்களுக்கு இடையே கடந்த 2023-ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை தற்போது வரைக்கும் நீடித்து வருகிறது. இதையடுத்து மணிப்பூரில் உள்ள மைத்தேயி இனத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கும்படி கூறிய அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தற்கு பழங்குடிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

மேலும், அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது ஏற்பட்ட மோதல், மாநிலம் முழுவதும் பரவி வன்முறையாக உருவெடுத்து, இன்று வரை தொடர்கிறது. இதற்கிடையே மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் மணிப்பூர் கல்வரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார். அதில், பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியிருந்தார். பிறகு அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் "மணிப்பூர் விவகாரம் தொடர்பான ப.சிதம்பரம் பதிவின் உள்ளடக்கத்தை நாங்கள் ஒருமனதாக கண்டிக்கிறோம். சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

manipur congrass write letter to mallikarjune karkhe for action against p sithambaram


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->