'ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. உண்மையான தேர்தல் நடைபெறவுள்ளது.' தமிழிசை சவுந்தரராஜன்..!
Tamilisai Soundararajan says that democracy has been saved
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 97,37,832 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, அதில் அதிகபட்சமாக சென்னையில் 14,25,018 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 03 மணியளவில் வெளியிட்டார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ள நிலையில், எஸ்ஐஆர் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், " ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. உண்மையான தேர்தல் நடைபெற உள்ளது. பொய் தேர்தல் அல்ல. நம்மை ஏமாற்றுபவர்கள் ஏமாந்துபோகும் தேர்தலாக வரப்போகும் தேர்தல் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilisai Soundararajan says that democracy has been saved