சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு: யுவராஜ்சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், நடிகைகள் சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை..!
The Enforcement Directorate has frozen the assets of cricketers including Yuvraj Singh and actresses in an illegal gambling app case
சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மாறும் நடிகர்களான நடிகை ஊர்வதி ரவுதேலா, நடிகர் சோனுசூட், இவர்களுடன் திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்கரவர்த்தி ஆகியோரின் ரூ.7.9 கோடி அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
1*Bet என்ற சூதாட்ட செயலி மீது பல்வேறு மாநில விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்தன. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இதில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.
இதன் மூலம் சம்பாதித்த பணத்தை மறைப்பதற்காக விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனுசூட், ஊர்வதி ரவுடேலா உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தற்போது இந்த வழக்கில் அமலாக்கத்துறை சுமார் ரூ.7.92 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.

இதன்படி யுவராஜ் சிங் - ரூ.2.5 கோடி.
நேகா சர்மா - ரூ.1.26 கோடி.
ஊர்வதி ரவுதேலா - ரூ.2.02 கோடி.
சோனு சூட்- ரூ.1. கோடி.
மிமி சக்கரவர்த்தி - ரூ.59 லட்சம்
ராபின் உத்தப்பா ரூ8.26 லட்சம
அங்குஷ் ஹஸ்ரா- ரூ.47.20 லட்சம் என அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
English Summary
The Enforcement Directorate has frozen the assets of cricketers including Yuvraj Singh and actresses in an illegal gambling app case